அருப்புக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி முத்தரையர் நகரைச் சேர்ந்த வீரவேல் அன்னலட்சுமி தம்பதியினர் தனது இரண்டு குழந்தைகளுடன் குள்ளூர்சந்தையில் தனது உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது பாலவனத்தம் அருகே இருசக்கர வாகனம் தடுமாறிக் கீழே விழுந்ததில் இரண்டு குழந்தைகள் மனைவி உட்பட 4 பேரும் காயமடைந்தனர்.
உதவிக்காக போராடிக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் விபத்தில் காயமடைந்த சிறுமி விஜி சுபா சிறுவன் விஜய் பாபு மற்றும் அவரது தாய் அன்னலட்சுமி
ஆகியோரை காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக தனது காரில் ஏற்றி வந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பீதியில் ஒருவரை ஒருவர் கை கொடுத்துக் கொள்ள அஞ்சும் வேலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனிதாபிமானத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.