மதுரை: பொதுவாக, போலீசார் என்றால் மிகவும் கடுமையானவர்கள் என்றும், எதிலும் கடுமையாக இருப்பார்கள் என்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் நிலையை மாற்றி, காக்கி சட்டைகளும் ஈரம் உண்டு என, நிருபிக்கும் வகையில், மதுரையில் காவல் துறை சார்பு ஆய்வாளரின் செயல்பாடு, மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது.
மதுரை திடீர் நகர் காவல் எல்லைக் குட்பட்ட காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோணை என்பவர், இவர் மதுரை மக்களுக்கு பரிசித்தமானவர் காரணம் பொதுச்சேவை செய்வதில் ஆர்வமிக்கவர். ஏற்கனவே, திருவிழா காலங்களில் பல ஏழை எளியவர்க்கு உதவி செய்து ஏழை பங்காளன் என்று பெயர் பெற்றவர். அப்படிப்பட்ட அந்த சார்பு ஆய்வாளர் சோனை என்பவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவரை அவசரகால ஊர்தியை வரவழைத்து, அவரை ஸ்டெச்சரில் தானே தள்ளி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து, மதுரை மக்களுக்கு குறிப்பாக முதியவர்களுக்கு உதவி செய்து வரும் சார்பு ஆய்வாளர் சோனையை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒரு சிலர் காவல்துறையினரை குறை சொல்லி வரும் போது, ஒட்டு மொத்த காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சார்பு ஆய்வாளர் சோனையை தமிழக அரசு கெளரவிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் பேசி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









