மனிதாபிமானத்தை உயிருடன் வைத்திருக்கும் இவர்களுக்காக பிரார்திப்போம்..

சமீபத்தில் சென்னையில் பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் அலைக்கழித்த பொழுது மனித நேயம் என்பது மரித்துவிட்டதா என்ற சந்தேகம் பலருடைய மனதில் எழுந்தது.

ஆனால் கீழக்கரையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் சகோதரர்கள் இதற்கு விதிவிலக்கு. மக்களின் அவசர தேவைக்கு காலம் நேரம் இல்லாமல் ஓடி வருவதிலிருந்து விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்வதில் காட்டும் வேகத்தில் இவர்களை மிஞ்ச முடியாது.

சமீப காலமாக கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தயங்கும் நபர்களின் மத்தியில்  இறைவன் விதித்ததை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது என்ற மன துணிவோடு நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

இப்பணியை சமுதாய அக்கறையோடு மக்கள் நலப்பணியை என்றும் போல் எச்சமயமும் மேற்கொண்டு, இன்றும் இவர்களின் சக நண்பர்கஏக  அஸாருத்தீன், நஸ்ருத்தீன், அப்துல் பாசித், பர்னாஸ், நுஸைர், யாசர் இணைந்து காரியங்களை செய்து முடிந்துள்ளார்கள்.

இத்தருணத்தில் இவர்களுடன் என்றும் இணைந்து பணியாற்றும் பர்வீனும் பாராட்டப்பட வேண்டியவர். இவர்களின் இந்த சீரிய பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!