பாதி சம்பளத்தை தானமாக வழங்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்லம் கான்..

டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்லம் கான் தனது சம்பளத்தில் பாதியை மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்கி வருகிறார்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் சர்தார் மான் சிங் என்பரின் குடும்பம் வசிக்கிறது. லாரி டிரைவரான மான் சிங் சில மாதங்களுக்கு முன் வழிப்பறிக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார்.
நீண்ட நாட்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த அவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களைப் பார்ப்பதற்காக தான் சம்பாதித்து சேர்த்த ரூ.80,000 பணத்துடன் வந்து கொண்டிருந்திருக்கிறார்.  பழக்கமில்லாத புதிய பாதையில் பயணித்த அவர் வழிகேட்க ஒரு இடத்தில் நின்றபோது, கொள்ளையர்கள் அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவும் அவரைக் கொன்றுவிட்டு அவரிடமிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
மான் சிங் இறப்புக்குப் பின் மிகவும் கஷ்டப்பட்டுவந்த அவரது குடும்பத்திற்கு உதவ டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்லாம் கான் முன்வந்திருக்கிறார். ஒருநாள் மான் சிங் குடும்பத்தினரை போன் மூலம் தொடர்புகொண்டு பேசிய அவர் ஒரு தொகையை நிதி உதவியாக அளிப்பதாகக் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!