மனித நேய பணியில் மதுரையில் ஆம்புலன்ஸ் இயக்கும் ஹரி..

மதுரை அண்ணாநகர் சுந்தரம் பார்க்கில் உசிலம்பட்டியை சேர்ந்த சித்ரா மற்றும் அர்ஜுனன் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.  இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அர்ஜுனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். ஆனால் சித்ராவின் உடலை பெற அவரது கணவரோ, உறவினர்களோ, குழந்தைகளோ யாரும் வரவில்லை. அவருடைய அக்கா ப்ரியா, திருப்பூரில் அன்றாடம் கூலி வேலை பார்த்து வருபவர், அவர் மட்டுமே பிரேதத்தை வாங்க வந்திருந்தார்.  ஆனால் அவரிடம் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்தவர்களின் உதவியை நாடினார்.

மேலும் வசதி  இல்லாத காரணத்தினால் பிரேதத்தின் காலில் அணிந்திருந்த மெட்டியை வைத்து கொண்டு உடலை அடக்கம் செய்து தரும்படி நேதாஜி ஆம்புலன்ஸ் ஹரியிடம் உதவி  கேட்டுள்ளார்.  இந்த நிலையில் ஹரி  பணம் ஏதும் பெறாமல் முழு செலவையும் தானே ஏற்றுக் கொண்டு ஆம்புலன்ஸ் வசதியுடன் நல்லடக்கம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.

மேலும் இதுபோன்று பல ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது போன்ற பணிகளை தொடர்ந்து ஹரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய சேவைக்கு  சித்ராவின் அக்கா ப்ரியா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!