அணிலை பற்றி அறிந்து கொள்வோம்.. நாமும் நேசிப்போம்.. அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மதுரையை சேர்ந்த கால்நடை மருத்துவர்!!

மதுரையில் சாலையோரம் கிடந்த இரட்டை அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மருத்துவர் பிரத்யேக வீடியோ காட்சிகளை நமது (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் பிரத்யேகமாக நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மதுரை பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கால்நடை மருத்துவர் மெர்லின் ராஜ், இவர் பணி விஷயமாக வெளியே சென்றபோது பிறந்த சில நிமிடங்களே ஆன இரு இரண்டு அணில் குட்டிகள் ஒரு மாதத்திற்கு முன்பு சாலையோரம் கிடந்துள்ளது,அதனை மீட்டு மருத்துவர் வீட்டிற்கு எடுத்து வந்து உரிய மருத்துவ சிகிச்சை அளித்து தொடர்ந்து பாலூட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இரண்டு அணி குஞ்சுகளும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வீட்டிற்குள்ளே துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது,இந்த இரண்டு குட்டிகளுக்கும் மருத்துவர் ஆரோ & ஆம்பள் என பெயர் சூட்டியுள்ளார், குணமடைந்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இரண்டு குட்டிகளும் சுற்றி வருவதாகவும் இந்நிலையில் அணில் குஞ்சுகளுக்கு மருத்துவர் பாலூட்டி வருகிறார், மருத்துவர் அணிலுக்கு அவரே பாலூட்டும் வளர்த்து வருவது தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!