*நான்கு பேருந்தில் மூன்று பேருந்து ‘கட்’ – கோவையில் 3 கிராம மக்கள் கடும் அவதி*
கோவை மாதம்பட்டி அருகே உள்ள மத்திப்பாளையம் கிராமத்திற்கு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றுக்குப் பிறகு ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. குறிப்பாக மத்திப்பாளையம், சென்னனூர், கிருஷ்ணராயம்புதூர் கிராமத்தில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இயக்கப்படும் ஒரு பேருந்தும் மதியம் முதல் மாலை வரை வருவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை போக்குவரத்து பொது மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.