முன்னாள் மாணவர்கள் முகத்தில் பூரிப்பையும், மனதில் மலரும் நினைவுகளை கொண்டு வந்த ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா..

கீழக்கரை ஹமீதியா தொடக்கபள்ளியின் முன்னள் மாணவர்களின் சங்கம் (Hameedia Primary School Assocuation Alumini -HSPAA) துவக்க விழா பள்ளி வளாகத்தில் 06/10/2019 அன்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மஜீத் சலீம் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் சதக் இல்யாஸ் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வை சூரத்து நிஸா தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையை பல முன்னாள் மாணவர்களும், கீழக்கரை முக்கிய பிரமுகர்களுமாகிய இஸ்மாயில், அகமது காமில், அமீருதீன், முகைதீன் தம்பி, தவமணி, அ.மு.சுல்தான், செய்யது சிராஜுதீன், தலைமை ஆசிரியை ஹமீது நிஷா, கபீர், அமீர் பாட்சா, ரெத்தினா முகம்மது, செய்யது இபுராஹிம் மற்றும் பலர் வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் ஏராளமான முன்னாள் மாணவர்களும,, மாணவிகளும் கலந்து கொண்டு பள்ளியின் எதிர்கால திட்டங்கள், பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும் இவ்வமைப்புக்கான பிரத்யேக வலைதள வெளியீடு வரும் அக்டோபர் 12ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரசன்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாலை 6.30 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து நிகழ்வின் ஒரு பகுதியாக சங்கத்தின் LOGO காணொளி காட்சி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு ஹம்னத் நசீராவின் நன்றியுரை மற்றும் துஆவுடன் நிறைவு பெற்றது.  இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பை Architect.கபீர் சிறப்புற செய்திருந்தது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!