தமிழக மாணவச் செல்வங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 12ம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வெளியாகிவட்டது. இவ்வருடமும் மாணவிகளே எல்லா பாடத்திட்டங்களிலும் முன்னனியில் வந்துள்ளனர். பின் தங்கிய மாவட்டம் என்று எல்லோராலும் புறந்தள்ளப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.85% மற்றும் 96.77% பெற்று தமிழகத்திலே முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. தேர்ச்சி விகிதத்துக்கு நாமக்கல்தான் என்ற மாயையை உடைத்து பின் தள்ளியுள்ளது.
அதேபோல் இந்த வருடம் கிரேடு அடிப்படையில் 840 மாணவிகளும், 320 மாணவர்களும் “ஏ” கிரேடு எடுத்துள்ளார்கள். இந்த வருட 12வகுப்பு முடிவுகள் அறிவிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்நதும் பாராட்டுக்குரிய விசயமாகும்.

இராமநாதபுர மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களையும் கீழக்கரை பள்ளி மாணவிகளே பெற்றுள்ளனர். முதல் நான்கு இடங்களை இஸ்லாமிய பள்ளி மாணவிகளும், ஐந்தாவது இடத்தை முகைதீனியா பள்ளி மாணவியும் பெற்றுள்ளார். முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரங்கள்:-
M. Hyrun hafeela – 1187/1200 M. Roshin barjana – 1183/1200 A. Ashiyath ashila – 1183/1200 M. Ameenathul azeera – 1178/1200 A. Fahimunisha. – 1174/1200
இது பற்றி இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் கூறுகையில், மாணவி ஹைருன் ஹபிலா கல்வியில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார், இம்மாணவி இந்திய அளவில் சிறந்து விளங்க வேண்டும், இம்மாணவியின் தனித்திறமையினால் நிச்சியமாக ஐஏஎஸ் போன்ற தேர்வு போட்டிகளில் தேர்வாகலாம், இதற்கு நான் முழு அளவில் உதவிகள் அளிக்க தயாராக உள்ளேன், இம்மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


இந்த மாணவிகளின் பெற்றோரையும் அறிமுகம் படுத்தி இருக்கலாமே