ஹமீதியா தொடக்கப்பள்ளி (HPSAA) முன்னாள் மாணவர்களின் மனிதநேய பணி..

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் இரண்டாவது படித்து வந்த மாணவன் சுகவீனமாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிகவும் சுகவீனமுற்ற சிறுவனை ராம்நாடு GHல் இருந்து திருவனந்தபுரம் சித்ரா மருத்துவமனைக்கு மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில், பெற்றோர்களால் திருவனந்தபுரம் செல்ல pass எடுக்க முடியவில்லை என்று  25/5/2020 தகவல் வந்தது.

இந்த சூழ்நிலையில் காலை 10 மணியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்தில் முயற்சி செய்தும்,1:30 மணிவரை கிடைக்கவில்லை. பின்னர் சென்னை secretariat ல் தொடர்பு கொண்டு , ராமநாதபுரத்தில் உள்ள தன்னார்வ நண்பர்கள் மூலம் pass ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் இரவு 8 மணிக்கு (26/5) ராமநாதபுரத்தில் இருந்து தமுமுக ambulance மூலம் உரிய முதலுதவி தயாரிப்புகளுடன் பயண செலவுகள் கொடுத்து, சிறுவன் எபனை திருவனந்தபுரம் அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்ந முயற்சியில் HPSAA அலும்னிக்கள் காமில் , ஹுப்பு ரசூல், சதக் ( Colombo), அஸ்லம், இல்யாஸ், ஜாபர் பாட்சா , ஹமீது நிசா ஆகியோர் மற்றும்  office bearers, ஜாகிர்-கத்தார், ஆசிக்(Ar-rahman videos), அமீர் பாட்சா, பிர்தௌஸ், ராமநாதபுரம் சுல்தான், ரமீஸ்தீன், ஹசன் ஃபைசல் மற்றும் ஏராளமான அலும்னிக்கள் விசாரித்தும், பொருளாதார உதவிகள் மற்றும், ஆலோசனைகள் வழங்கியும் உதவினர். இச்செயல்பாடுகளை செயலாளர் (HPSAA) விளக்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!