மெரினா அசோசியேஷன் கட்டுமான நிறுவனம் சார்பாக HPSAA (ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம்) நற்தொண்டு நிறுவனம் மூலமாக ராமநாதபுரம் அருகே (பட்டினம்காத்தான்) ECR ரோட்டில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 150 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பேரிடர் கால நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் கரோனா கால பேரிடரின் போது சுமார் ஆயிரம் பேருக்கு கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரங்களில் வழங்கப்பட்டது. இன்று (4/6/2021-வெள்ளிக்கிழமை) நடைபெற்ற உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ஹமீதியா அலம்னி செயலாளர் இன்சினியர் கபீர் ,கத்தார் ஜாஹிர், பைசல், அமீர் பாட்சா மற்றும் கிழக்குத் தெரு ஜமா அத்தைச் சேர்ந்த s.m.பாக்கர் மற்றும் சக்கரக் கோட்டை அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்வை Hpsaa உறுப்பினர் ஆசிக் ஏற்பாடு செய்தார்.


You must be logged in to post a comment.