“அடிப்படை” வசதி இல்லாத மதுரை பைகாரா சுகாதார நிலையம்…கர்பிணிகளை தரையில் அமர வைக்கும் அவலம்…

“அடிப்படை” வசதி இல்லாத மதுரை பைகாரா சுகாதார நிலையம்…கர்பிணிகளை தரையில் அமர வைக்கும் அவல நிலையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பைகாரா முத்துராமலிங்கபுரம் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு   சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்து இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என புகார் எழுந்து உள்ளது.

கர்பிணிப் பெண்கள் தரையல் உட்கார வைக்கப்பட்டால் சிரமத்துக்குள்ளாரவர்கள் என்ற அடிப்படையில் அமர்வதற்கான வசதிகள் இல்லாதது வேதனையான விசயம். அதையும் தாண்டி தொற்றுநோய் பரவும் காலத்தில் தரையில் உட்காருவதால் நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.

இதுசம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தினால் பழங்காநத்தம் பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும்  மூடப்பட்டுள்ள பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையை  நிரந்தரமாக செயல்படுத்தினால் இப்பகுதி மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என கர்ப்பிணி ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!