திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அப்பாளபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கீர்த்தனா (23) இவர்களுக்கு ஏற்கனவே 3-வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் நிறைமாத கற்பிணியான கீர்த்தனாவை பிரசவ வலி ஏற்பட்டு நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது பரிசோதித்த மருத்துவர் கர்பபை வாய் திறந்துள்ளது குழந்தை பிறந்து விடும் என்று கூறி (13.01.19) ஞாயிறு இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளித்துள்ளார்
இந்நிலையில் நேற்று (14.01.19) திங்கள் இரவு 10 – மணி அளவில் குழந்தை பிறப்பதற்கு தாமதமாகிக் கொண்டே செல்கிறது அறுவை சிகிச்சை செய்து விடலாம் என கூறி அறுவை சிகிச்சை செய்து குழந்தையை (ஆண்) வெளியே எடுத்துள்ளனர் அப்போது கீர்த்தனாவுக்கு அதிகமான இரத்தப் இழப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு போதிய இரத்தம் இந்த மருத்துவமனையில் இல்லாததாலும் அதற்கு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த மருத்துவமனை நிர்வாகம் செய்யாததாலும் தொடர் இரத்த இழப்பு ஏற்பட்டு கீர்த்தனா உயிரிழந்துள்ளார் …..
மேலும் அவரது கணவர் இராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் கூறுகையில்.
மருத்துவமனையின் அஜாக்கிரதையாலும் அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான இரத்த சேமிப்பு மற்றும் அனுபவமிக்க மருத்துவர் குழு இந்த மருத்துவமனையில் இல்லாததாலும் மேலும் அறுவை சிகிச்சையின் போது சில தவறுகள் நடந்துள்ளதாலும் கீர்த்தனாவுக்கு தொடர் இரத்த போக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்.
மேலும் 30,000 மேல் பணம் கட்டப்பட்ட நிலையில் இந்த இழப்பிற்கும் மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் தராமல் மருத்துவமனை நிர்வாகம் அளக்கழித்ததாகவும் ஆம்புலன்வரும் முன் உடலை வெளியேற்றி விட்டதாகவும் நிலக்கோட்டை காவல்துறை DSP மூலம் எங்களை மிரட்டி இரவோடு இரவாக ( 2.00 AM) அளவில் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினர் என்றனர்.
செய்தி:- ஃபக்ருதீன்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









