இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதித்து உள் நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கேட்டறிந்தார். நோய் பரவுவதற்கான காரணங்களை ஆராயவும், அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டதா என்பது குறித்து கேட்டறிந்தார். நோய் பாதித்த அனைவரும் வெள்ளாங்குளம் ஊராட்சிப்பகுதியினை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து
அப்பகுதியை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை, நோயாளிகள் பதிவேட்டை ஆய்வு செய்தார். சிகிச்சைக் வரும் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்களிடம் அறிவுறுத்தினார்.
மீனங்குடி ஊரணி, கிணற்றை ஆய்வு செய்தார். அப்பகுதியில் குவிந்த குப்பையை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டவும் அறிவுறுத்தினார். வெள்ளாங்குளம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். வெள்ளாங்குளம் ஊராட்சியில் சுகாதாரத்துறையினால் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை பார்வையிட்டார். வைரஸ் காய்ச்சல் உருவாவதற்கான காரணியை கண்டறியவும், சுற்று வட்டாரப்பகுதிகளிலுள்ள நீர் தேக்கங்களில் உள்ள நீரை, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியிலுள்ள நீரின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தவும், நீர் தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் குளோரினேசன் செய்யவும் உடனடியாக சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தவும், காய்ச்சல் பரவாததை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வட்டார மருத்துவ அலுவலர் வி.சரவணன், வட்டாட்சியர் (கடலாடி) முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மருத்துவ முகாம் மருத்துவர் ராமச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












