ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ‘சிருநல்லூர்’ கிராமத்தில் 70 வயது மூதாட்டி பாப்பா கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
பெரிய அளவில் வருமானம் ஏதும் இல்லாத நிலையில் நூறு நாள் வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவருக்கு தன்னுடைய மகள் வழி பேரன் இருப்பதற்கு சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.
ஆனால், அதற்கு மின்சார வசதி செய்து தர மூதாட்டி பாப்பா பலமுறை மின்வாரிய அதிகாரிகளையும் மேல்முறையீட்டு அலுவலர்களையும் சந்தித்தும் கூட மின்சார வசதி செய்து தரப்படவில்லை என சொல்லப்படுகிறது.
அந்த வீட்டில் 40 ஆண்டு காலமாக வசித்து வரும் தனக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை என்றும் ஒருவேளை இரவில் பாம்பு பூச்சி கடித்தாலோ அல்லது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ தகவல் சொல்லி பேசுவதற்கு செல்போனில் சார்ஜ் போடுவதற்கு கூட வழியில்லை, எனவே தயவு செய்து தனக்கு மின்சார வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment.