தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு; அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம்..

தி.மலை மாவட்டம், செங்கத்தில் ,பிரபல நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பாக மௌன ஊர்வலம்  தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் நடைபெற்றது . தேமுதிக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சங்கர், நகர பொருளாளர் சிவபெருமாள் அனைவரையும் வரவேற்றார் தேமுதிக ஒன்றிய கழக செயலாளர் சிவா. வெங்கடகிருஷ்ணன், நகர செயலாளர் ராமமூர்த்தி . ஆகியோர் முன்னிலை வகித்தனர் செங்கம் செய்யாற்றங்கரை பாலத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் வரை மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .ஊர்வலத்தில் திமுக கட்சியின் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, அதிமுக ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், அருணாச்சலம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்  குமார், அ.ம.மு. க ஒன்றிய செயலாளர் சரவணன், ,பாட்டாளி மக்கள் கட்சி  ஒன்றிய செயலாளர் ஜோதி ,இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் லட்சுமணன், சர்தார், பிரகாஷ், மதிமுக, ஒன்றிய செயலாளர் குப்புசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சஞ்சய், தமுமுக ஜாபிர் பாஷா, தவூலத்தான் நாம் தமிழர் கட்சி . யாதவ மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் ஆகியோர்கள் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில், தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டு மறைந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நினைவேந்தல் கூட்டம் அனைத்து தரப்பு கட்சியினர் புகழஞ்சலி  நடைபெற்றது.

நிகழ்ச்சியின் இறுதியில் தேமுதிக கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!