பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி தரிசனம்…

ராமநாதபுரம், நவ.7- கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.

கடந்த அக்.30 தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இயலாததால் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு இன்று (நவ.7) மாலை அணிவித்து தரிசனம் செய்தார், தேவர் வீட்டில் உள்ள பூஜை அறையில் தியானம் செய்து, தேவரின் இளமைப்பருவம் உள்ளிட்ட புகைப்படங்களை பார்வையிட்டார், தேவர் நினைவாலயம் பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து நலம் விசாரித்தார் பழனி, தங்கவேலு, ஆகியோர் வரவேற்றனர். ஓபிஎஸ் அணி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் மதுரை ராஜ்மோகன், முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மூக்கையா, ஒன்றிய செயலாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராமலிங்கம், கோவிலாங்குளம் சரவணன், வாசுதேவன், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் மருத்துவர் பரிதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிண்ணான்டு தேவன், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!