தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி..

இராமநாதபுரம், செப்.11- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், டெல்லி மேலிட தமிழக சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிகுமார், திமுக இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது.கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!