தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை..

தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா, பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு 07.04.2025 மற்றும் 11.04.2025 ஆகிய இரு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

தென்காசி மாவட்டம், தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 07.04.2025 (திங்கள் கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11.04.2025 (வெள்ளிக் கிழமை) அன்றும் நடைபெற உள்ளதை முன்னிட்டு 07.04.2025 (திங்கள் கிழமை) மற்றும் 11.04.2025 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும்  நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாட்களாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

 

மேற்குறிப்பிட்ட நாட்களில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும், மேலும், இம்மாவட்ட கருவூலம், சார் நிலைக் கருவூலங்கள் குறைந்த பட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப் படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 26.04.2025 மற்றும் 03.05.2025 ஆகிய இரு சனிக் கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!