திருச்செந்தூர் வைகாசி விசாகம் ; மே-18 ம் தேதி தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை !

தூத்துக்குடிமாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகதிருவிழாவைமுன்னிட்டு18.05.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் மே  18-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 18.05.2019 சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணிநாளாக இயங்கும் கல்விநிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இது போன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 18.05.2019 அன்று பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாணவ,மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.  இது செலாவணிமுறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் 08.06.2019 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது .” என தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!