கிராமத்தையே சுற்றுலா தலமாக மாற்றி விளையாடும் மாணவர்கள்..

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப கோடை கால சுற்றுலா தலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியில் உள்ள சிறுவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளையே சுற்றுலா தலமாக மாற்றி கோடை விடுமுறையில் மீன்பிடித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

உசிலம்பட்டி பகுதியில் சுற்றுலாத்தளம் ஏதும் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொழுதைப்போக்குவதற்காக கண்மாய்களில் மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் கோடை வெயிலை சமாளிக்க அங்குள்ள கண்மாயில் குளித்துவிட்டு சேலையால் மீன்பிடித்து பொழுதைப் போக்கி வருகின்றனர். அந்த கண்மாயில் கட்லா, கெண்டை போன்ற மீன்கள் அதிகம் காணப்படுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன் பிடிப்பதில் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!