திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சுரண்டை மகாத்மாகாந்தி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர துணைத் தலைவர் திரவிய குமார் தலைமை வகித்தார். பாஜக நகர தலைவர் கணேசன் வரவேற்றார். முன்னாள் நகர தலைவர் அருணாசலம், சங்கர நாராயணன், முருகேசன், டி.கே எம் ஆறுமுகசாமி, ஓவியா சிவனைந்த பெருமாள், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி, கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் வைகுண்ட ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொது செயலாளர் கே.எம். அருள் செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்வி. அன்புராஜ், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கேவி. கண்ணன், துணைத் தலைவர் சிபிஎஸ் சுந்தரகுமார், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.கே வெற்றிவேல் மற்றும் கார்மேகநாதன் நகர செயலாளர் ராமசாமி, சுமு. முருகன், மாரியப்பன், மூர்த்தி, முத்துக் குமார், யோகராஜன், ராஜமுருகேஷ், தர்மராஜ், ஆறுமுகலிங்கம், முத்துவேல், வல்லப தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.