சென்னை  திருவொற்றியூர் பகுதியில் கனரக வாகன ஓட்டிகளிடம் தொடரும் திருட்டு – இருவர் சிக்கினர்..

சென்னை திருவொற்றியூர் சாலையில் சமீபத்தில் அருகே கண்டெய்னர் லாரியோடு காத்திருந்த பரணி டிரான்ஸ்போர்டு ஓட்டுனர் தினேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கோண்டு கை மற்றும் கால் பகுதியில் வெட்டி விட்டு ஓடியுள்ளார்கள். இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் போக்குவரத்து காவலர் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் இது சம்பந்தமாக   வெட்டிவிட்டு ஓடிய ராம்குமார் (வயது 22) மற்றும் மதன் (வயது 32) என்ற இரு நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் வெட்டுகாயமடைந்த இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அங்கிருந்த லாரி டிரைவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் .திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டி வருகையில் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படும். அந்த இடங்களில் மர்ம நபர்கள் சிலர் ஒளிந்திருந்து கஞ்சா உட்கொண்ட நிலையில் போதையோடு திடீரென முன்னாள் நின்று கொண்டு கத்தி. உருட்டு கட்டை போன்றவஐயால் தாக்கிவிட்டு பணம் செல்போன் ஆகியவற்றை வழிபறி செய்து விடுவதாகவும் சாட்டினார்கள்.

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல வழிபறி கொள்ளையர்கள் ஏழுமலை என்ற காவலரை வெட்டியதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கு காவலர்கள் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற வழிபறி கோள்ளையிலிருந்து தப்பிக்க முடியுமெனவும் என வருத்தத்துடன் கூறி முடித்தனர்.

 இது குறித்து இணை ஆணையர் பகலவன் மற்றும் துணை ஆணையர் அமுல்ராஜ் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தகவல்:-M.மதன்குமார், தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!