இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ! மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !!

இராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் -2024-க்கான “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில். உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி என்பது 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேவையான கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் நோக்கமாகும். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிக்க வேண்டும். உயர்கல்வியால் மட்டும் தான் சரியான வேலைவாய்ப்பை பெற்றிட பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் இலட்சியம் மற்றும் கனவு கண்டிப்பாக இருக்கும். அந்த நிலைப்பாட்டை வெற்றியடைய செய்யும் காலம் என்பது 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில் தான் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கான நிலை உருவாகும். இந்த காலக்கட்டத்தை தவறவிடாமல் பயன்படுத்தி தங்கள் இலட்சியத்திற்கும், திறமைக்கும் ஏற்ற உயர்கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும். உயர்கல்வி படிப்பதற்கான அத்துணை வழிகாட்டுதல்களையும் அரசு செய்து வருகிறது. எனவே தங்களுக்கு உரிய காலத்தை தவறவிடாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். காலம் தவறி தனக்குரிய இலட்சியம் நிறைவேறவில்லை என்று பின்னர் வருத்தப்படாத அளவிற்கு உரிய காலத்தில் உரிய கல்வியை பெற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பழனிக்குமார், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!