காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உதவி மையம்…

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., உத்தரவுப்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2019 ம் வருடம் சார்பு ஆய்வாளர் பொதுத்தேர்விற்கு இணைய வழி விண்ணப்பம் செய்பவர்களின் வசதிக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி மையத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தின் தரை தளத்தில் தற்போது இந்த உதவி மையம் இயங்கி வருகின்றது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் On Line Form – பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் பொதுமக்களுக்கு போதிய விளக்கம் அளிக்கவே இந்த உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. எனவே விண்ணப்பதாரர்கள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய Web site: tnusrbonline.org உதவி மையம் தொலைபேசி எண். 94981-34944 E- Mail : [email protected] செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!