வைத்தீஸ்வரன்கோவில் பகுதி ஆதரவற்ற விடுதி மாணவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்த பேராசிரியர்கள்

விடுதிகளில் தங்கி பயிலும் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற பள்ளி மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோருக்கு பொறையார் த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்கள் நிவாரண உதவிகளை அளித்துள்ளனர். நாகை மாவட்ட சமூக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வழிகாட்டுதலின் படி விடுதிகளில் தங்கிபடிக்கும் பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவிகளுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை பொறையார் த.பே.மா.லு கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், பேராசிரியர்கள் ஜோப் பிரபாகர், கேத்தரினாள் புண்ணியவதி, ஸ்டீபன் தினகர், ராஜன், ஜூலியஸ் விஜயக்குமார், செல்வராஜ், ஆசிரியை ஜூலியட், இளஞ்செழியன், இருதயராஜ் மற்றும் மாலா இண்டேன் கேஸ் உரிமையாளர் இளங்கோவன் ஆகியோர் தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், மாணிக்கபங்கு, குட்டியாண்டியூர், பனம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர். சமூகபாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுதுகாப்பு சமூக அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் சமூக ஆர்வலர் பேராசிரியர். தேவசகாயம் ஆகியோர் ஒருங்கினைப்பு செய்திருந்தனர். தங்களது வீடுகளை தேடி வந்து உதவியளித்த பேராசிரியர்களுக்கு மாணவர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!