மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ,மதுரை மாவட்ட ஊனத் தடுப்பு சார்பில் செல்லம்பட்டி ,எழுமலை, தொட்டப்ப நாயக்கனூர் பகுதியில் இருக்கும் தொழு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தொழு நோயாளிகளின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி ,பருப்பு, சீனி ,எண்ணெய் ஆகியவற்றை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார் .இதில் அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இதில் 150 க்கு மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
You must be logged in to post a comment.