செங்கல்பட்டு அருகே தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த போக்குவரத்து போலீசார்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ஒரு மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று மறைமலைநகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன், மறைமலைநகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அப்போது தலை கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை மடக்கி பிடித்து தலைக்கவசம் அணிவதன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இனிமேல் வெளியில் செல்லும்போது தவறாமல் தலைக்கவசம் அணிந்து செல்வோம் என உறுதிமொழி எடுக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மறைமலைநகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லோகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு- சக்திவேல்
You must be logged in to post a comment.