தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தூத்தூக்குடி, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேதாரணயத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோடியக்கரை- 6.8 செ.மீ., வேளாங்கண்ணி-4 செ.மீ., திருப்பூண்டி -3.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

You must be logged in to post a comment.