கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன. மழை நீர் தேங்கியுள்ளன.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
பள்ளி, கல்லூரிகள்:
விழுப்புரம்
கடலூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
கிருஷ்ணகிரி
புதுச்சேரி
பள்ளிகளுக்கு மட்டும்:
வேலூர்
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
தருமபுரி
சேலம்
செங்கல்பட்டு – திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு தாலுகாக்களுக்கு மட்டும்..
You must be logged in to post a comment.