கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்..

கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்..

15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

2 மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்குச் சென்று, ஆயத்தப் பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

ரொட்டி, குடிநீர் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும்.

மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

மின் விநியோகம் சீராக இருக்க, கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளித்துப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள், JCB இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

2 தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.

பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!