லட்சத்தீவு மற்றும் அதனை யொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் குறிப்பாக தமிழகம், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடல் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,மேலும் 5 மாவட்டங்களுக்கு 12-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 12-ந்தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேமூட்டத்துடன் காணப்படும், பரவலாக மழைக்கு வாய்ப்பு.13-ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.