தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் கன மழை..
காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,விழுப்புரம்,, கடலூர் ,சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகி வருகிறது..
சிங்கப்பெருமாள் கோவில், அரும்புலியூர் காஞ்சிபுரம் மாவட்டம், நெடுங்குணம் திருவண்ணாமலை மாவட்டம், நெல்லிக்குப்பம் கடலூர் மாவட்டம், கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது…
தற்போது காலை 6:30 மணி அளவில் விழுப்புரம், சென்னை ,செங்கல்பட்டு , பெரம்பலூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது
இன்று மாலை வரை தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ,பெரம்பலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,சேலம் கிழக்கு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக கனமழை தொடரும்..
கொங்கு மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில நேரம் மிதமான மழை காணப்படும்
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளது இது தற்போது விக்கிரவாண்டி திண்டிவனம் அருகே காலை 5 மணி அளவில் நீடித்து வருகிறது இது மேலும் அடுத்த சில மணி நேரங்களில் வலு குறைந்து தமிழ்நாட்டின் வடக்கு உள் மாவட்டங்கள் வழியாக ஊடுருவி அரபிக் கடலுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


You must be logged in to post a comment.