அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது.
இது வரும் 24ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும். இதனால் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.