தமிழகத்தில் மீண்டும் கன மழை! பொதுமக்களே உஷார்..

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும். டிச.,11ம் தேதி தமிழகம்- இலங்கை கடற்பகுதிகளை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (டிச.,08) முதல் டிச.,9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 11ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 12ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!