தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிக சாதகமாக உள்ளது.
இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு நாளை அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக இராமநாதபுரம் இராமேஷ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி மண்டபம் வைப்பார் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு.
நெல்லை தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மாலை இரவு நேரங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அம்பாசமுத்திரம் விகேபுதூர் ஆலங்குளம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ஆகிய தாலுகாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.


You must be logged in to post a comment.