இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதாலும், பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில்,சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.