தென்காசி மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை ஆய்வுக்கூட்டம் 24.11.2023 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய நோய்களை தடுக்கும் விதமாக நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பற்றியும் மற்றும் பொது சுகாதார துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற டெங்கு, மருத்துவ பேறு சம்பந்தமான ஆய்வறிக்கையினை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர். P.R.முரளிசங்கர் சமர்ப்பித்தார். அதனடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் வட்டார அளவில் உள்ள மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
முன்னதாக பொது சுகாதாரத் துறையின் சார்பாக பள்ளி சிறார் நல திட்டத்தின் கீழ் அனைத்து நிலை கல்வி நிலையங்களில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 2023 2024 ஆம் கல்வியாண்டில் நடந்த பரிசோதனைகளின் அடிப்படையில் புதிதாக இதயம் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல்சிசிக்சை தேவைப்படுவோர்களுக்கான சிறப்பு இதய நோய் கண்டுபிடிப்பு முகாம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 92 நபர்கள் கலந்து கொண்டார்கள். அதில் 24 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 9 நபர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பினர். அவர்களுக்கு வேண்டிய ஊட்டசத்து மற்றும் பழவகைகள் அடங்கிய பெட்டகத்தினை துரை.இரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









