இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனைப்படி புதுவலசை ஊராட்சியில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணி இன்று நடந்தது.
இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, உச்சிப்புள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி ஆகியோர் கண்காணித்தனர்.
இதே போல் பனைக்குளம் ஊராட்சி வீடுகள் தோறும் இன்று மேற்கொண்ட கொசு ஒழிப்பு பணியை ஊராட்சி மன்ற தலைவி பௌசியா பானு கண்காணித்தார்.
You must be logged in to post a comment.