திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் ஏற்படும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடத்திலேயே! வைத்து நெருப்பு மூட்டப்படுவதால் புகை மண்டலமாக உள்ளது. இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு இதய நோயாளிகளும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மூச்சுக் தினறல் ஏற்படுகிறது.
ஆகவே, பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பை கழிவுகளை நெருப்பு மூட்டுவதை தவிர்த்து குப்பைகளை அப்புறப்படுத்தி தந்து உதவிட நடவடிக்கை எடுத்திடுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்


You must be logged in to post a comment.