கடையம் பகுதியில் சாக்கடை பிரச்சினையால் பொது மக்கள் கடும் அவதி…முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ சார்பில், கடையம் யூனியனை முற்றுகையிட முடிவு…

முதலியார்பட்டி காந்தி நகரில் கழிவு நீர், மற்றும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. முதலியார்பட்டி, காந்தி நகரில் உள்ள ஆறு தெரு ஓடைகள், மூன்றாம் தெருவில் உள்ள தனியார் இடத்தில் குளம் போல் தேங்கி கிடந்தது. இது சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பலமுறை கடையம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், கழிவு நீர் தேங்கிய இடத்திற்கு சொந்தக்காரர்கள், கழிவு நீர் தேங்கிய இடத்தை சுற்றியும் பிளாட் போடுவதற்காக, தண்ணீர் வராமல் மறித்தனர். இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது. இந்நிலையில் நேற்று பெய்த மழையில் மழையில், தெருவிற்குள் தண்ணீர் முட்டளவு தேங்கியது. பல வீடுகளுக்குள் தண்ணீரும், கழிவு நீரும் புகுந்தது. இதனை பார்வையிட்ட முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல்காதர், மற்றும் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜீஸ் ஆகியோர் இது சம்பந்தமாக நாளை அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு, கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி கடையம் யூனியன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். உடன் முஸ்லிம் லீக் மாவட்ட மாணவரணி செயலாளர் தமீம் அன்சாரி, ஆலங்குளம் தொகுதி இளைஞரணி துணைச் செயலாளர் ஷாரூக், எஸ்டிபிஐ ரவணசமுத்திரம் கிளை தலைவர் இப்ராஹிம், செயலாளர் ஹூஸைன் உள்ளிட்டோரும், அப்பகுதி மக்களும் உடனிருந்தனர்.

செய்தி-  கடையம்: பாரதி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!