கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் நிலவி வரும் அவல நிலையை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல் வேறு அமைப்புகள் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் பதிவு செய்தனர். ஆனால் அதற்கும் முறையான நடவடிக்கை எடுக்காததால் தகவல் அறியும் உரிமை ஆணை மூலமாக நீதிமன்றம் மூலமாக நகராட்சி அலுவலகத்தை நேரடியாக ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் அவல நிலைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பது அங்கு வந்திருந்தவர்கள் கூறிய கருத்துக்களே சாட்சியாகும். உதாரணத்திற்கு நோயாளிகளுக்கு மருந்துகளை முறையாக விளக்கி வழங்குவதில்லை, அனைத்து மருந்துகளையும் ஒரு பையில் குப்பையை போல் கொட்டி கொடுப்பது, அசுத்தம் நிறைந்த பிணவறை, விபத்துக்குள்ளாகி பிரேத பரிசோதனைக்கு வரும் உடல்களில் இருந்து பிரிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த துணிகள் எந்த சுகாதாரமும் இல்லாமல் வெளி பகுதிகளில் தூக்கி எறியப்பட்டிருந்து, அப்பகுதியே அருகில் செல்ல முடியாத அளவு துர்நாற்றம். (கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
அதேபோல் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் நம்முடைய ஆய்வின் போது முறையான ஒத்துழைப்பினை வழங்காமலும், ஆய்வு செய்ய கோரிய கோப்புகளை வழங்காமலும் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டனர்.
இது சம்பந்தமான நமது புகார் மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












