கீழக்கரையில் வீடுகளில் கொடுக்கும் குப்பையை மக்கும் மற்றும் மக்கா வகை குப்பைகள் என்பதை தரம் பிரித்த பின்னர் குப்பைகள் கிடங்குகளில் கொட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உத்தரவு.
ஆனால் கடந்த சில வாரங்களாக வடக்குத்தெரு மணல்மேடு அருகில் தொடர்ந்து தரம் பிரிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் அப்ணிபயை தொடரச்சியாக செய்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில், “ஆரம்பத்தில் குப்பையை எடுத்து சென்று விடுவார்கள், ஆனால் சில தினங்களாக இப்பகுதியிலேயே தரம் பிரிக்கும் பணியையும் செய்து வருகிறார்கள். ஆரம்கத்தில்
அவசரத்திற்காக ஒரு நாள் செய்கிறார்கள் என்று எண்ணினோம், ஆனால் இப்பொழுது அது தொடர் நிகழ்வாகி விட்டது, இதில் உடனடியாக நகராட்சி ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையுடன் கூறினார்.


You must be logged in to post a comment.