கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கான வழியனுப்பு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் மவ்லவி காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி மக்தூமி M.A. தலைமையில் நடைபெற்றது.
ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலனக் கமிட்டி தலைவருமான டாக்டர் A.S.M. கியாதுத்தீன் முன்னிலை வகித்தார்.அல்மத்ரஸத்துல் ஜாமிஆ மாணவர்கள் ஹிஸாம், முஹ்சின் ஆகியோர் கிராஅத் ஓதி தமிழாக்கம் செய்தனர்.ராமநாதபுரம் சென்ட்ரல் பள்ளி இமாம் மவ்லவி யாசீன் யூசுபி ஹஜ்ஜின் அமல்களை பற்றி உரையாற்றினார்.டவுன் காஜி மதீனா முனவ்வராவின் சிறப்புகள் குறித்தும் ஸியாரத் ஒழுக்கம் குறித்தும் உரையாற்றினார்.ஹாஜிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பெண்களுக்கு பள்ளியின் வடபுறம் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ஜமாஅத்தார்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகிகள் செய்தனர்.
டவுன் காஜி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


You must be logged in to post a comment.