கொரோனா ஊரடங்கை வீணாக்காமல் பயனுள்ளதாக ஆகிய மதுரை கல்லூரி மாணவ, மாணவிகள்..

உலகையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை பயனுள்ளதாக ஆக்க மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளான பாலா, அட்சயா, சுகன்யா, செந்தில், சுயம்பு, விக்னேஷ், காயத்ரி, பத்மா ஆகியோர் தங்களுக்கு தேவையான வருமானத்தை உயர்த்த யூடியூப், சமூக வலைதளம் மூலமாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து தெரிந்து கொண்ட பின் அதை கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து தனித்தனியாக அவர்களுக்குத் தேவையான பொருட்களை வேலைகளையும் பிரித்துக்கொண்டு, ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு வருவதும், மற்றொருவர் அவருக்குத் தெரிந்த கைவினைப் பொருட்களை தயாரித்து கொடுப்பதற்கும், மற்றொரு மாணவி அதற்கு வர்ணம் திட்டுவதும்,  மேலும் திருமண காலங்களில் தேவைப்படும் மணப்பெண்ணுக்கான ஜாக்கெட்டுகள் தைத்து பல டிசைன்களில் வகைப்படுத்தி சுமார் 500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆரம்பித்துள்ளார்கள்.

இதைப் பற்றி இவர்கள் செய்யும் கைவினைப் பொருட்களை அவர்களுடைய பிரத்யேக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே இவர்கள் திறமையை பார்த்து தற்பொழுது நவராத்திரி கொலுவுக்கு தேவையான கைவினைப்பொருட்கள் பொம்மைகளை தாங்கள் செய்து தரவேண்டும் என இப்போதே ஆர்டர் கிடைத்துள்ளது. அதற்கான பிரத்யேக பணிகளை தற்போது தொடங்கிவிட்டதாக நம்மிடம் தெரிவித்தனர்.

படித்த படிப்பிற்கும் செய்த தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் யார் கையையும் எதிர்பார்த்து நாம் நிற்க கூடாது என்று தங்களது தேவைகளை அவர்களே சம்பாதித்து பூர்த்தி செய்து கொண்டும் வருங்கால இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தை அவர்கள் மூலமாக ஒவ்வொரு இளைஞர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இவர்களைப் போலவே ஒவ்வொருவரும் அரசு வேலையில் நம்பியும், அரசு கொடுக்கும் இலவச அரிசிக்கும், பருப்புக்கும் எதிர்பார்க்காமல் தங்களது சொந்த காலில் நிற்கும் தன்னம்பிக்கை உள்ள இளைஞர்களை பார்த்து நாம் பெருமைப்பட வேண்டும் அவர்களது போன்ற இளைஞர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

இவர்களின் முயற்சி மேலும் வெற்றி பெற நமது (சத்திய பாதை மாத இதழ்) கீழை நியூஸ் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கம்:-

https://instagram.com/squadthings_?igshid=1d2z5lll36qdg

செய்தியாளர் வி காளமேகம் மதுரையில் இருந்து

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!