கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப தலைவர் எஸ் சதக் அப்துல் காதர் தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
சங்க உறுப்பினர் மக்தூம் ஈசா சிறப்புரையாற்றினார். விடுதலைப் போராட்ட வீரர்களாக மாணவர்களின் பங்களிப்பும் ,நடன நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் பள்ளித் தாளாளர் H.சிராஜுதீன் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், பரிசளிப்பு தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஹமீது நிஷா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பெற்றோர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.