கீழக்கரை ஹமீதியா தொடக்கப்படள்ளி பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி..

03.07.2018 ஹமீதியா தொடக்கப்பள்ளியில்  பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் புதிதாக தொடங்கப் பெற்ற கராத்தே மற்றும் யோகா போன்ற பயிற்சி வகுப்புகள் பற்றி தாளாளர்,  பெற்றோருடன் கலந்துரையாடினார்கள்.
இக்கூட்டத்தில் பெற்றோர்களும் வெகு ஆர்வத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் .ஒவ்வொரு வாரமும் வகுப்பறை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக Badge வழங்குவது பற்றியும் , மாணவர்களின் தனித்திறன் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவது பற்றியும் தலைமையாசிரியர் எடுத்துரைத்தார்கள்.
அதே போல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து “Star of the month certificate” ம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!