கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா 01.04.2017 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் நெறியாளர் டாக்டர்.J. முஹம்மது ஜஹபர் அவர்கள் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார்.  பின்னர் கல்லூரியின் முதல்வர்.E.ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் மதுரை காமசராசர் பல்கலைக்கழக பல்லுயிர் மற்றும் வனவியல் துறையின் தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர்.K.முத்துச்செழியன் அவர்கள் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.  மேலும் இந்நிகழ்ச்சயில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் A.அப்பாஸ் முகைதீன்,  சதக் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் A..அலாவுதீன்,  முகம்மது தஸ்தகிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் S. சோமசுந்தரம்,  செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர்.ஹபீப் முகம்மது,  இராநாதபுரம் சைடெக் கல்வி மைய இயக்குநர் S. ரியாஸ் அகமது மற்றும் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். ஜவஹர் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக கல்லூரி முதல்வர் E.ரஜபுதீன் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் பின்மொழிந்தனர்.  இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கங்களும் பட்டங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் 308 இளங்கலை (Under Gruaduate ) மாணவ மாணவியருக்கும் 47 முதுநிலை (Post Graudate )  மாணவ மாணவியருக்கும் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் கல்லூரியின் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!