இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் உதிர்தல்,
வறட்சி மேலாண்மை மற்றும் தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட உரம் இடுதல் அவசியம் குறித்து கூறினார். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வள்ளல் கண்ணன் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் பற்றியும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார், முனைவர் ராம்குமார் தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து கூறினார். நிகழ்ச்சியில்
நாகராஜன் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு), ஸ்ரீதர் மாவட்ட ஆலோசகர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ராஜா, உதவி விதை அலுவலர் ஆனந்த் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சி முடிவில் சீதாலெட்சுமி வேளாண்மை அலுவலர்
நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப அலுவலர்கள் பானுமதி ,பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
You must be logged in to post a comment.