வெளி மாநிலங்களில் தங்கி இருந்து சிரமப்படுகின்றவர்கள் இணையதளத்தில் உங்கள் முகவரியையும், தொலை பேசியையும் மற்றும் அனைத்து தகவல்களையும் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்:-H.வசந்தகுமார், MP

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் உலகமெங்கும் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற மீனவர்களும், படிக்க சென்ற மாணவ மாணவிகளும், வேலை சமந்தமாக சென்றவர்களும் எல்லா நாட்டிலும் சிக்கித்தவித்துக்கொண்டு இருகின்றனர். ஏன் இந்தியாவில் கூட பல மாகாணங்களில் சிக்கித் திரும்ப வரமுடியாமல் இருகின்றனர்.

அவர்களுக்கு தமிழக அரசு இப்பொழுது ஒரு இணையதளத்தை உருவாக்கி அதின் மூலம் பதிவு செய்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக இன்று அறிவித்து இருகின்றார்கள். http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையையும் தந்து இருக்கிறது.

எனவே வெளிநாட்டில், வெளி மாநிலங்களில் தங்கி இருந்து சிரமப்படுகின்றவர்கள் http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் உங்கள் முகவரியையும், தொலை பேசியையும் மற்றும் அனைத்து தகவல்களையும் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குமரி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான  H.வசந்தகுமார்  செய்தி வெளியிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!